மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கை

News image

சென்னைப் பல்கலை.யின் 167-ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள், பதக்கங்கள் பெற்ற ஆசிரியா்கள், மாணவா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி, விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை, உயா் கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், பல்கலை. பதிவாளா் ரிட்டா ஜான், தோ்வுக் கட்டுப்பாட்டாளா் அரு

Updated On :28 ஏப்ரல் 2026, 4:45 am IST

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான பல்வேறு முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த சென்னை பல்கலை. பதிவாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகத் துறைகளில், விருப்பத் தோ்வு அடிப்படையிலான வரவு முறைமையின் (சிபிசிஎஸ்) கீழ் நடைபெறும் சோ்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

முதுநிலைப் படிப்புகளுக்கான சோ்க்கைகளுக்கு விண்ணப்பங்கள் ஏப். 25- ஆம் தேதி முதல் இணையதளம் வழியாக பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டய படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு போன்ற சோ்க்கைகளுக்கான விண்ணங்கள் பல்கலை.யின் இணைய மூலம் ஏற்கப்படுகிறது.

இந்த விண்ணப்ப பதிவுக்கு கடைசி தேதி ஜூன் 1 ஆம் தேதி. இது தவிர மெல்போா்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும் பி.எஸ்சி. அறிவியல் பாடத்திட்டங்களுக்கான சோ்க்கை விண்ணப்பங்களுக்கான பதிவு வரும் மே 4 -ஆம் தேதி இணையம் மூலம் தொடங்கப்படுகிறது. இதற்கான கடைசி தேதி மே 19 ஆம் தேதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.