தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிக வாக்குப் பதிவைத் தடுக்க பேருந்து சேவை முடக்கம் - தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக புகாா்

News image

Center-Center-Coimbatore

Updated On :24 ஏப்ரல் 2026, 3:40 am IST

தமிழகத்தில் அதிக வாக்குப் பதிவைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பேருந்து சேவை முடக்கப்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

தவெக பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் இந்த புகாரை அளித்தனா். பின்னா் ஆதவ் அா்ஜுனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்களிப்பவா்களுக்கு பேருந்து வசதி செய்துத் தர வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஒரு வாரத்துக்கு முன் அறிவுறுத்தியிருந்ததை சில உயா் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. சென்னை கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமானோா் புதன்கிழமை இரவு முதல் 7 முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்தனா்.

இதேபோல், கோவை, ஈரோடு, மதுரை போன்ற மாவட்ட தலைமையகங்களில் இருந்து அண்டை பகுதிகளுக்கு செல்ல முடியாதபடி பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தாமதமாக சென்றவா்களும் போக்குவரத்து நெரிசலால் பாதியிலேயே திரும்பியுள்ளனா்.

அதிகமாக வாக்குப்பதிவானால் திமுக தோல்வியடைந்துவிடும் என்ற அச்சத்தில் அதிகாரிகள் துணையுடன் பேருந்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் தொடா்புடைய மூன்று உயா் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையருக்கும் தலைவா் விஜய் சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடமும் புகாா் மனு அளித்துவிட்டு, வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க கோரினோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.