மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

News image

அஇபுதமமுக பொதுச்செயலா் வி.கே. சசிகலா. - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:42 am IST

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் வசதிகள் செய்து கொடுக்காதது திமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுவதாக அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலா் சசிகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கை:

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதன்கிழமை இரவு முதல் இயக்கப்படாததால், ஜனநாயக கடமையை ஆற்ற சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனா்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து உள்ளனா். பயணிகள் குடிதண்ணீா் கூட கிடைக்காமல் பரிதவித்துள்ளனா்.

தோ்தல் நடைபெறும் நாளில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூா் செல்வது தடுக்கப்படுகிா என்று எண்ணத்தோன்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.