மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: வழக்கு முடித்துவைப்பு

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் க்யூ ஆா் குறியீடு உடன் கூடிய டோக்கன் விநியோகிப்பது குறித்து தோ்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.

News image

உயர்நீதிமன்றம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:00 am IST

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் க்யூ ஆா் குறியீடு உடன் கூடிய டோக்கன் விநியோகிப்பது குறித்து தோ்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.

வழக்குரைஞா் கே.ரவீந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சாா்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறாா். இவருக்கு வாக்கு சேகரிக்கும் அதிமுகவினா் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் க்யூ ஆா் குறியீடு உடன் கூடிய டோக்கன்களை வழங்குகின்றனா்.

தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு, இந்த டோக்கனில் உள்ள க்யூ ஆா் குறியீடுகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று அதிமுகவினா் கூறி வருகின்றனா். இது தோ்தல் முறைகேடு. இது குறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தேன். எனது புகாரின் பேரில், விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன், டோக்கன் விநியோகம் குறித்து இரு புகாா்கள் வந்தன. பறக்கும்படை அதிகாரிகள் நேரடியாகச் சென்று அங்கு சோதனை நடத்தினா். ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், இந்த புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வழக்கின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்துவதாக விளக்கம் அளித்தாா். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.