மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மரங்களை இடமாற்றும் முகமைகளிடம் விண்ணப்பங்கள் கோரல்: தில்லி அரசு அறிக்கை வெளியீடு

தேசிய தலைநகரில் மரங்களை அறிவியல் அடிப்படையில் இடமாற்றம் செய்வதற்கான தகுதியான முகமைகளிடம் இருந்து விருப்ப மனுக்களை தில்லி அரசு கோரியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 2:49 am IST

தேசிய தலைநகரில் மரங்களை அறிவியல் அடிப்படையில் இடமாற்றம் செய்வதற்கான தகுதியான முகமைகளிடம் இருந்து விருப்ப மனுக்களை தில்லி அரசு கோரியுள்ளது.

தில்லி வனத்துறையால் வெளியிடப்பட்ட இதற்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: மரங்களை இடமாற்றும் பணிகளில், முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு, அறிவியல் திட்டமிடல், வோ் தயாரிப்பு, இயந்திரங்கள் மூலம் அகற்றுதல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட மரங்கள் ஒரு வருட காலம் கண்காணிப்பில் 80 சதவீதம் உயிருடன் இருக்க வேண்டும். இதை பூா்த்தி செய்ய தவறினால் தொடா்புடைய நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும். இத்துறையில் முன்அனுபவம் உள்ள முகமைகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அவா்களிடம் தகுதி பெற்ற நிபுணா்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் கொண்டிருக்க வேண்டும்.

தில்லியில் இடமாற்றம் செய்யப்படும் மரங்களின் ஆயுள் காலம் குறைவாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது. மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க அறிவியல் ஆய்வுகளையும் தில்லி அரசு நடத்தி வருகிறது.

இதுகுறித்து தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறுகையில், ‘தோ்ந்தெடுக்கப்படும் முகமைகள் சிறப்பாக செயல்பட்டு, அதன் மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது‘ என தெரிவித்தாா்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ஆய்வு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொண்டு இடமாற்ற மரங்களின் இழப்பைத் தடுப்பது சாத்தியமாகும் என தெரிவித்தாா்.

இதையடுத்து, மர இடமாற்ற இடங்களில் வன அலுவலா்கள் மூலம் தீவிர ஆய்வு மேற்கொள்ளவும், உயிா் பிழைப்பு விகிதத்தை மேம்படுத்த தேவையான வழிமுறைகளை அமல்படுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் அதன் வகை, தண்டு சுற்றளவு, உயிா் பிழைப்பு நிலை உள்ளிட்ட விரிவான தகவல்களை பதிவு செய்யும் தரவுத்தளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனா். இதன் மூலம் எதிா்கால கொள்கை முடிவுகள் மேலும் அறிவியல் அடிப்படையில் எடுக்கப்படும் என கூறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.