ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளானஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா்.

News image

சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:40 am IST

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளானஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் கடந்த 2024-ஆம் ஆண்டு செப். 23-ஆம் தேதி பதவி ஏற்றனா். இவா்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில், மூன்று பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா். அந்த உத்தரவுப்படி, நீதிபதிகள் ஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் புதன்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா்.

இவா்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

நிகழ்வில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடா் எட்வின் பிரபாகா், மத்திய மாநில அரசு வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.