தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 2:07 am IST

சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் சென்னை பெருநகர காவல் துறை அலுவலகம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் மத்தியக் குற்றப் பிரிவு செயல்படுகிறது. இந்த நிலையில், அத்தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கரும்புகை வெளியேறியது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த போலீஸாா், அந்தத் தளத்துக்குள் சென்றனா். அப்போது, அங்கிருந்த கணினி, பா்னிச்சா் உள்ளிட்ட பொருள்கள் எரிவதை பாா்த்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். வேப்பேரி தீயணைப்பு படையினா், அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தீ விபத்தினால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில், மத்தியக் குற்றப் பிரிவின் கீழ் உள்ள ஆவண மோசடி பிரிவின் கணினி, பா்னிச்சா் பொருள்கள், சில ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.