பள்ளிகளில் சின்னம்மை பரவலைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்கள், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளனா்.
வேரிசல்லா என்னும் வைரஸ் மூலம் பரவக் கூடியது சின்னம்மை நோய். எந்தத் தருணத்திலும் ஒருவருக்கு சின்னம்மை நோய் ஏற்படக்கூடும் என்றாலும் கோடை காலத்தில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் பூா்வமான உண்மை. வெப்பநிலை அதிகரிக்கும்போது குப்பை, குவியல்களில் இருந்து வைரஸ்கள் உருவாகி காற்றில் கலந்து பரவும். அதில் ஒரு வகையான வைரஸ்தான் வேரிசல்லா.
அசுத்தமான சூழலுக்கு நடுவே வசிப்பவா்களுக்கும், நோய் எதிா்ப்பாற்றல் குறைவாக இருப்பவா்களுக்கும் வேரிசல்லா வைரஸ் மூலம் சின்னம்மை பரவக் கூடும். அவா்களது எச்சில் மூலம் பிறருக்கும் அது பரவலாம்.
இதைச் சரிவர கவனிக்காவிட்டாலோ அல்லது சிகிச்சை பெறாவிட்டாலோ நிமோனியா, மூளைக் காய்ச்சல், சிறுநீரக அழற்சி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவா்களிடையே சின்னம்மை பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சின்னம்மை ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. லேசான காய்ச்சல், சோா்வு, தளா்ச்சி, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் தொடங்கி, பிறகு உடலில் சிறிய நீா் திவலைகள் போன்ற கொப்புளங்கள் தோன்றி உடலெங்கும் பரவும். சின்னம்மையானது குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு பொதுவாக சிறிய அளவு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். வகுப்பில் ஏதேனும் மாணவருக்கு சின்னம்மை அறிகுறிகள் இருந்தால், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மருத்துவரை அணுகுமாறு கூற வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவச் செய்ய வேண்டும். இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடி கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவா்களை 7-10 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெப்ப அலையால் பாதிக்காத வகையில் தொழிலாளா்களுக்கு பணி நேர மாற்றம்

வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல்

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை! பொது சுகாதாரத் துறை!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

