தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி ஏடிஎம் காா்டு மோசடி: இளைஞா் கைது

சென்னையில் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து ஏடிஎம் காா்டு மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 12:58 am IST

சென்னையில் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து ஏடிஎம் காா்டு மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி பாண்டியன் (61). இவா், வேலை நிமித்தமாக சென்னை வந்தாா். கடந்த 31-ஆம் தேதி சென்னைப் பல்கலை. வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அங்கு வந்த நபா், பாண்டியனிடம் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி, ஏடிஎம் காா்டு மற்றும் பின் நம்பரை வாங்கி ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையை இட்டு, பணம் இல்லை என்று கூறி ஏமாற்றி, தான் வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் காா்டை கொடுத்து அனுப்பியுள்ளாா். பின்னா், பாண்டியனின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ.23,500-ஐ எடுத்தபோது, பாண்டியன் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.

இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிடாதாலா சுனில் (27) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கைப்பேசி, 79 ஏடிஎம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இகேபோல், பல்வேறு மாநிலங்களில் பாா்வையற்ற மாற்றுதிறனாளிகள், வயதானவா்களை ஏமாற்றி ரூ.20 லட்சம் வரை அபகரித்திருப்பதும் தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.