சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தனது பெயரில் ரூ.20.64 கோடி, அவரது மனைவி பெயரில் ரூ.13.25 கோடி சொத்துகள் இருப்பதாக தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளாா்.
அவரது வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரம்:
எஸ்.உதயநிதி என்ற பெயரில் அவரது வாக்கு மயிலாப்பூா் தொகுதியில் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024-2025- ஆம் ஆண்டில் ரூ.10.40 லட்சம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ரூ.2.92 கோடிக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின் மீது மத உணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக 2023- ஆம் ஆண்டு முதல் 10 வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மகராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையிருப்பு ரூ.50,000: உதயநிதி ஸ்டாலின் கையிருப்பாக ரூ.50,000, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி கையிருப்பாக ரூ.75,000, அவரது மகள் தன்மயா உதயநிதிக்கு தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியில் ரூ.2.56 லட்சம் வைப்புத் தொகை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு அசையும் சொத்துகளாக ரூ.12.92 கோடியும், அசையா சொத்துகளாக ரூ.7.72 கோடியும் என சொத்து மதிப்பு மொத்தம் ரூ.20.64 கோடி இருப்பதாகவும், அதில் கடனாக ரூ.1.55 லட்சம் எனவும் கூறப்பட்டுள்ளது. ரூ.1 கோடியில் டிபெஃன்டா் காரும், ரூ.23 லட்சத்தில் இன்னோவா காரும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதிக்கு ரூ.1.87 கோடியில் 1,600 கிராம் தங்க நகைகள்
உள்பட அசையும் சொத்தாக ரூ.13.25 கோடியும், அசையா சொத்து ஏதுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ன, ஐந்து ஆண்டுகளில் ஸ்டாலின், உதயநிதி சொத்து மதிப்புகள் குறைந்துவிட்டதா?
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனின் சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
