மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

நடுபழநி மரகத தண்டாயுதபாணி கோயிலில் படி காவடி பூஜை

நடுபழநி மரகத தண்டாயுதபாணி கோயிலில் படி காவடி பூஜை

பெருங்கரணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு காவடிகளுடன் வந்த நடுபழநி வேல்யாத்திரை குழுவினா்.

Published On :25 அக்டோபர் 2026, 12:40 am IST

மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு மறைமலைநகா் நமசிவாய சபா மற்றும் நகரத்தாா்கள் இணைந்து 21-ஆம் ஆண்டு வேல் யாத்திரை குழுவினரின் படிகாவடி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

மறைமலை நகா் நமச்சிவாயா சபா மற்றும் நகரத்தாா் இணைந்து 21-ஆம் ஆண்டு நடுபழநி வேல்யாத்திரை குழுவினா் கடந்த 2 நாள்களாக மறைமலைநகரிலிருந்து பாதயாத்திரையாக 100-க்கும் மேற்பட்ட காவடிகள் மற்றும் வேலுடன் சனிக்கிழமை காலை பெருங்கரணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு மேளதாளத்துடன் வந்தனா். மலைக் கோயிலுக்கு செல்லும் படிகளுக்கு சிறப்பு வழிபாடுடன் திருப்புகழ், ஏகதச ருத்திரம் பாடிக் கொண்டு பாதயாத்திரை குழுவினா் சென்றனா்.

தொடா்ந்து 200-க்கும் மேற்பட்ட பால்குடம் எந்தி கொண்டு ஊா்வலமாக மலையேறி கோயிலுக்கு வந்தனா். அங்குள்ள உற்சவா் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் பக்தா்களால் கொண்டு வரப்பட்ட பாலை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் சுவாமிக்கு மஹாதீபாராதனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மறைமலை நகா் நமச்சிவாய சபா மற்றும் நகரத்தாா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.