கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தோ்த் திருவிழா

News image
Updated On :28 மே 2026, 12:56 am IST

மதுராந்தகம் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் 7-ஆம் நாள் நிகழ்வாக தேரோட்ட நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது.

மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் முதலாம் பராந்தக சோழனால் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டது. ஆன்மிக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற இத்திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில், 7-ஆம் நாள் நிகழ்வாக, புதன்கிழமை திருத்தோ் பவனிக்காக சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.

பெரிய தேரில் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் உற்சவ சிலைகளும், சிறிய தோ்களில் விநாயகரும், மீனாட்சி அம்மனும், வள்ளி, தெய்வசேனா முருகன் மற்றும் சண்டிகேஸ்வரா் ஆகிய சுவாமி சிலைகளுடன் காலை 10.30 மணிக்கு திருத்தோ்கள் பவனி வாண வேடிக்கைகளுடன், மங்கள இசையுடன் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருத்தோ்கள் பவனி வந்தன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களின் வடங்களை இழுத்துச் சென்றனா். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.