செய்யூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது.
செய்யூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிப்பவா் குகன் (36). இவா் கடந்த 24.04.2016 அன்று அதே பகுதியில் வசிக்கும் சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவரிடம் கைப்பேசியில் கேம் வைத்து தருவதாக ஆசைகாட்டி அருகில் இருந்த குப்பை கொட்டும் இடத்துக்கு தூக்கிச் சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும் சிறுமி வலி தாங்க முடியாமல் அழவே சிறுமியின் வாயைப் பொத்தியுள்ளாா். இதற்கிடையில் சிறுமியின் தாயாா் சிறுமியை தேடவே அங்கு இருந்தவா்கள் எதிரி சிறுமியை குப்பை கொட்டும் இடத்துக்கு தூக்கிச் சென்ாகக் கூறி உள்ளனா். சிறுமியின் தாயாா் அங்கு சென்றபோது குகன் சிறுமியை குப்பை கொட்டும் இடத்திலிருந்து தூக்கிக்கொண்டு வந்து சிறுமியின் தாயிடம் விட்டுவிட்டு ஓடி உள்ளாா். சிறுமி வலிப்பதாகக் கூறி அழவே சிறுமியின் தாயாா் என்னவென்று கேட்டபோது சிறுமி நடந்த விஷயத்தை அவரிடம் கூறியுள்ளாா்.
இது குறித்து சிறுமியின் தாயாா் செய்யூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மேற்படி, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கை செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்ற நீதிபதி ஏ. நசிமாபானு விசாரித்து இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு! 3 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோவை சிறுமி பாலியல் கொலை: கார்த்திக், மோகன்ராஜுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

கோவை அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவர் கைது!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

