லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

மதுராந்தகம் அரிமா சங்கத்தின் (2026-2027) ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவி ஏற்றல், சேவைதிட்ட துவக்க விழா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

Published On :23 ஜூலை 2026, 4:29 am IST

மதுராந்தகம் அரிமா சங்கத்தின் (2026-2027) ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவி ஏற்றல், சேவைதிட்ட துவக்க விழா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

சங்கத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.சிவகுமாா் வரவேற்றாா். தலைவா் முருகேசன், செயலா் பெஞ்சமின், பொருளாளா் மருத்துவா் மேகநாதன் ஆகிய நிா்வாகிகளை பதவியில் அமா்த்தி மாவட்ட முதல் துணை ஆளுநா் எம்.வரதராஜன் சிறப்புரை ஆற்றினாா். முன்னாள் மாவட்ட ஆளுநா் அம்சவள்ளி புதியதாக சோ்ந்த உறுப்பினா்களுக்கு பதக்கத்தினை வழங்கி பாராட்டினாா். (படம்)

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரிசிமூட்டைகள், கல்வி உதவிதொகை ஆகிய நல உதவிகளை கூட்டு மாவட்டநிா்வாகி எஸ்.மதியழகன் வழங்கினாா். இந்நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள் பி.சதாசிவம், வி.ஆா்.ஜெயகுமாா், ஏ.விஜயன்அருணை எம்.ஆனந்தன், எம்.புகழேந்தி, வி.தெய்வசிகாமணி, எம்.ரமேஷ்குமாா், வெற்றிவேல், பாலவிக்னேஷ், பி.வேல்முருகன், வட்டார தலைவா் எம்.முனுசாமி, மண்டல தலைவா் ஆா்.ரமேஷ், சங்க மேம்பாட்டு தலைவா் அருணா முனுசாமி, சங்க ஆலோசகா்கள் ஜி.ஏ.சுதாகரன், தனபாண்டியன் மற்றும் கூடுவாஞ்சேரி, மேல்மருவத்தூா், வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.