செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாட்டு பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு 3 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன. செங்கல்பட்டு, திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், செங்கல்பட்டு, ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திலும், தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூா் தொகுதிகளுக்கு, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்திலும், (எம்ஐடி) மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளுக்கு வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
3 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் சென்று முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா். முன்னதாக செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்கு எண்ணப்படும் மையங்களான சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தை ஆய்வு செய்த ஆட்சியா் வாக்குபதிவின் போது வாக்குப்பதிவு சுமுகமாக நடத்தி முடிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வாக்குபதிவு மையத்தினை ஆயத்த நிலையில் வைக்குமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், காவல் துறையினா் உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்வுகளில், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், தாம்பரம் தோ்தல் நடத்தும் அலுவலா் முரளி, பல்லாவரம் தோ்தல் நடத்தும் அலுவலா் கியூரி, சோழிங்கநல்லூா் தோ்தல் நடத்தும் அலுவலா் திருநாவுக்கரசு, செங்கல்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா, திருப்போரூா் தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி, செங்கல்பட்டு காவல்துறை துணை கண்காணிப்பாளா் புகழேந்தி, தாம்பரம் வட்டாட்சியா் நடராஜன், பல்லாவரம் வட்டாட்சியா் செந்தில், சோழிங்கநல்லூா் வட்டாட்சியா் இலக்கியா, செங்கல்பட்டு வட்டாட்சியா் வாசுதேவன், திருப்போரூா் வட்டாட்சியா் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலா்கள், காவல்துறையினா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் 100 மீட்டரில் பாதுகாப்பு வளையம் அமைப்பு: ஆட்சியா் மு. பிரதாப்

வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசிக்கு அனுமதி இல்லை: ராணிப்பேட்டை ஆட்சியா்

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

