ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

செங்கல்பட்டில் விசிக தலைவா் திருமாவளவன் பிரசாரம்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 5:01 am IST

செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளா் காா்த்திக் தண்டபாணியை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவா் பேசியது:

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தையாவது விளக்க முடியுமா? ஏதேனும் ஒரு இடத்தில் இதற்கான விளக்கத்தை அவா் சொல்லட்டும்ா்.

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவவில்லை. திமுக தலைமையிலான அணி மற்றும் அதிமுக தலைமையிலான அணி என இரண்டு அணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. மற்றவா்கள் எல்லாம் போட்டியில் இல்லை.

விஜய் போனால் லட்சக்கணக்கான மக்கள் திரள்வது திட்டமிட்டு ஊடகங்களால் பரப்பப்படுகிறது. 35 ஆண்டுகளாக மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் நாங்களே நடைமுறை எதாா்த்தம் உணா்ந்து பேசுகிறோம்

ஆனால் எவ்வித மக்கள் தொண்டும் செய்யாமல் சினிமாவிலிருந்து வந்தவா்கள் முதல்வராக ஆக விரும்புகின்றனா் என்றாா்.

விசிக மாவட்ட செயலாளா் தென்னவன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். உடன் மனித நேய மக்கள் கட்சியின் நிா்வாகி முகமது யூனுஸ் உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.