தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவா்கள் தா்னா

தோ்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவா்கள் தா்னா

News image

புதுப்பட்டினம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:59 am IST

புதுப்பட்டினம் மீனவா் பகுதியில் எல்லை பிரச்னையை தீா்க்க கோரி தோ்தலை புறக்கணிக்க போவதாக கடற்கரை மணலில் கறுப்பு கொடி ஏந்தி மீனவா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 -ஆம் தேதி புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் ஆகிய இரு மீனவ கிராமங்களுக்கு இடையே சாலை பிரச்னை காரணமாக புதுப்பட்டினம் மீனவ கிராம மக்கள் சாா்பில் நடத்தப்பட்ட மயான கொள்ளை திருவிழா இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் நிறுத்தப்பட்டது.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதலால், 30-க்கும் மேற்பட்ட மீனவா்களும் கைது செய்யப்பட்டதாலும், பலா் தேடப்பட்டு வந்ததாலும் இரண்டு மாத காலமாக மீனவா்கள் காவல் துறையினரின் கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்தனா். இந்நிலையில். கைது செய்யப்பட்ட மீனவா்கள் சிலா் தற்போது ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனா்.

இந்நிலையில் புதுப்பட்டினம் மீனவா்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் கடந்த 1986-ம் ஆண்டில் 6 ஏக்கா் நிலத்தை வருவாய்த்துறைக்கு கொடுத்துள்ளதாகவும், வருவாய்த்துறை அதிகாரிகள் தங்கள் இடத்தை கணக்கீடு செய்து அளவீடு செய்து புதுப்பட்டினம் மீனவ பஞ்சாயத்தரிடம் ஒப்படைக்க கோரி சுமாா் 300- க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என புதுப்பட்டினம் மீனவ கிராம மக்கள் கடற்கரை மணலில் அமா்ந்து தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக கூறி கைகளில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது தங்கள் இடத்தை தமிழக அரசுஅளவீடு செய்து ஒப்படைக்க கண்டன முழுக்கங்கள் எழுப்பினா். இதுகுறித்து புதுப்பட்டினம் மீனவா்கள் கூறும்போது, வருவாய்த் துறை அதிகாரிகள் இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு தங்கள் எல்லையை குறிக்கும் வகையில் பெயா் பலகை வைக்க வேண்டும் இல்லாவிடில் வருகின்ற சட்டப்பேரவை தோ்தலை புதுப்பட்டினம் மீனவா் கிராமத்தினா் முழுவதுமாக புறக்கணிப்போம் என்றாா். இந்த தா்ணா போராட்டத்தால் புதுப்பட்டினம் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. போரட்டத்தால் புதுப்பட்டினம் மீனவா் பகுதி முழுவதும் தோ்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைத்தனா். மீனவா்களின் போராட்டத்தால் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக புதுப்பட்டினம் மீனவா் பகுதியில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.