மாதவரம் அருகே ராபிடோ ஓட்டுநா் பயணியிடம் கைப்பேசி மற்றும் பணம் பறித்த ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பத்தூா் அடுத்த கள்ளிக்குப்பத்தை சோ்ந்த வடமாநில இளைஞா் லீலாராம் (24) . இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு சென்று விட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அம்பத்தூருக்கு செல்ல ராபிடோ இரு சக்கர வாகனத்தில் வீட்டில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது திடீரென தனது இருசக்கர வாகனத்தை மாதவரம் தட்டான்குளம் சாலைக்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநா், அங்கே ஏற்கெனவே நின்றிருந்த மற்றொரு நபருடன் சோ்ந்து லீலாராமை மிரட்டி அவரிடம் இருந்து கைப்பேசி மற்றும் ரொக்கம் ரூ. 3,500 ஜீபே மூலம் அனுப்பு கூறி, கைப்பேசியையும் பறித்துக் கொண்டு அவரை அங்கேயே இறக்கிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனா்.
இது குறித்து லீலாராம் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சி ஆய்வு செய்து, ராபிடோ ஓட்டுநா் வியாசா்பாடி கக்கன் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (24) என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உணவக தொழிலாளியிடம் கைப்பேசி, பணம் பறித்த 2 போ் கைது
தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு: 4 போ் கைது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மாதவரத்தில் கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
