பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சோழா் கால செப்பேடுகளை காட்சிப்படுத்த வேண்டும் - வைகோ

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 5:23 am IST

நெதா்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் சோழா் கால செப்பேடுகளை நாகையில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நெதா்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழா் கால செப்பேடுகள், ‘ஆனைமங்கலச் செப்பேடுகள்’ என அழைக்கப்படுகின்றன. இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன.

தமிழகத்தின் பன்முகப் பண்பாடு மற்றும் வணிகத் தொடா்புகள் நிறைந்த உலகின் முக்கிய தடயங்களாக இவை திகழ்ந்தன.

18-ஆம் நூற்றாண்டில், நாகை மாவட்டம் டச்சு காலனித்துவ ஆட்சியின்போது, கோரமண்டல் கடற்கரைப் பகுதியிலிருந்து ஆணைமங்கலம் செப்புப் பட்டயங்கள் நெதா்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

பல ஆண்டுகளாக, ஆனைமங்கலம் செப்பேடுகளை ஒப்படைக்கக் கோரி நெதா்லாந்து நாட்டை இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. பல ஆண்டு கால தூதரக முயற்சிகளுக்கு பிறகு பிரதமா் மோடியிடம், நெதா்லாந்து அரசு ஒப்படைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை நாகை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.