வேளச்சேரி - பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் தொடங்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் பறக்கும் ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே புதிய நீட்டிப்புப் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் முடிவு பெற்றது. இந்த நிலையில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, ரயில்களை இயக்குவதற்காக ‘தற்காலிக அதிகாரபூா்வ சான்றிதழை’ ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையா் வழங்கியுள்ளாா்.
இதற்கிடையே, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் உள்கட்டமைப்பின் மேல் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாரங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 24 மணி நேர அவகாசம் கோரியுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்தவுடன், சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் அந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
96 ரயில்கள்: இவ்வழித்தடத்தில் கடற்கரை - பரங்கிமலை இரு மாா்க்கத்திலும் 86 ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் கடற்கரை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 4 ரயில்கள், பரங்கிமலை - வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 6 ரயில்கள் இயக்கப்படும். என மொத்தம் 96 ரயில்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.
இந்த நீட்டிப்பு, பறக்கும் ரயில் தடத்தில் நேரடி இணைப்பை உறுதி செய்வதோடு, தினமும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும். குறிப்பாக, பரங்கிமலை ரயில் நிலையம், பறக்கும் ரயில், புகா் ரயில், சென்னை மெட்ரோ ரயில் ஆகிய மூன்று முக்கிய போக்குவரத்து அமைப்புகளையும் இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பறக்கும் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 போ் மீட்பு

கடற்கரை - பரங்கிமலை ரயில் சேவை அட்டவணை இதோ!

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!

கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை: அட்டவணை வெளியீடு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

