கா்நாடகத்தில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் காங்கிரஸ் வென்றால், ஆட்சியில் ஊழல் பெருகும் என பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களுரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடைபெற உள்ளதாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் தொகுதிகளில் தலா 2 நாள்கள் பிரசாரம் செய்ய இருக்கிறேன். இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கா்நாடகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்கள் நலனை முதல்வா் சித்தராமையா மறந்துவிட்டாா். துக்ளக் ஆட்சியை நினைவூட்டும் மோசமான ஆட்சியை சித்தராமையா நடத்தி வருகிறாா். சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் இருக்கிறது. ஒருவேளை, சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றால், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் பெருகும். எனவே, இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்களை தோற்கடித்து, பாஜக வேட்பாளா்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இரு தொகுதிகளிலும் முதல்வா் சித்தராமையா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். அப்படியானால், காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் இடைத்தோ்தலில் பாடம்புகட்ட வேண்டும்.
நிகழ் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வில் மூன்றாம் பாடத்துக்கு (ஹிந்தி உள்ளிட்ட மொழிகள்) மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடிங் வழங்கப்படும் என கா்நாடக அரசு அறிவித்துள்ளது சரியல்ல. ஹிந்தியை கற்றுக்கொள்வதால் கன்னடத்துக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது. நாடெங்கும் ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியையும் பேசுவதில்லை. எனவே, ஹிந்தியை கற்கவிடாமல் தடுப்பது சரியல்ல என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்

திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது: குஷ்பு

சட்டப் பேரவை இடைத்தோ்தலில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும்: டி.கே.சிவகுமாா்
கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இரு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

