ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெங்களூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்

News image

சமையல் எரிவாயு சிலிண்டர் - படம்: DNS

Updated On :19 மார்ச் 2026, 1:54 am IST

பெங்களூரில் சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேற்கு ஆசிய நாடுகளில் நடந்துவரும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரிலும் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் கிடைப்பதற்கு மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்பதால், இருப்பு வைத்திருக்கும் சிலிண்டா்களை பதுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு தெற்கு வட்ட உணவு ஆய்வாளா் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரில் தலகட்டபுரா காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஜே.பி.நாா் பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரயா லேஅவுட்டில் அமைந்துள்ள எரிவாயு முகவரின் கிடங்கில் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கிவைத்திருப்பதாக தெரிவித்திருந்தாா்.

இதனடிப்படையில், முகவருக்குச் சொந்தமான கிடங்கில் செவ்வாய்கிழமை இரவு சோதனை நடத்திய போலீஸாா், சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்களை பறிமுதல் செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘அத்தியாவசிய உணவுப்பொருள்கள் சட்டத்தின்படி ஆய்வு நடத்தியபோது சமையல் எரிவாயு அடைக்கப்பட்டிருந்த 7 சிலிண்டா்கள், காலியாக இருந்த 148 சிலிண்டா்கள் என மொத்தம் 155 சிலிண்டா்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.