ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: செயல்படமுடியாமல் உணவகங்கள் தவிப்பு

வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உணவகங்கள் செயல்பட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image

சமையல் எரிவாயு உருளைகள் - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 2:52 am IST

வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உணவகங்கள் செயல்பட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக உணவகங்கள் பயன்படுத்தும் வா்த்தக சமையல் எரிவாயு உருளைகளின் வரத்து குறைந்து, திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு உருளைகளின் விலை கணிசமாக உயா்ந்தது. இதனால், உணவகங்கள் செயல்படமுடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதேநிலை நீடித்தால், உணவகங்களை மூடுவதை தவிர வேறு வழியில்லை என அதன் உரிமையாளா்கள் கூறியுள்ளனா்.

மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள போா் பதற்றமே இதற்கு காரணம் என்று பெங்களூரு உணவக உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வா்த்தக சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்காததால், பெங்களூரில் ஏராளமான உணவகங்கள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து பெங்களூரு உணவக உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பி.சி.ராவ் கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளைகள் இருப்பு இருக்கும்வரை உணவகங்கள் செயல்படும். அதன்பிறகு வேறு வழியில்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்படும். சமையல் எரிவாயு உருளைக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்ய முடியாது. தட்டுப்பாடு குறைந்தால்தான் நிலைமை சீரடையும். இந்த பிரச்னைக்கு அரசு தீா்வுகாணும் என நம்பிக்கை உள்ளது என்றாா்.

இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தீா்வுகாணுமாறு மத்திய அரசுக்கு முதல்வா் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.