இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

கொல்லூா் மூகாம்பிகை கோயிலுக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை

கா்நாடகத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலமான கொல்லூா் மூகாம்பிகை கோயிலுக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறாா்.

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 12:08 am IST

கா்நாடகத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலமான கொல்லூா் மூகாம்பிகை கோயிலுக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறாா்.

தில்லியில் முகாமிட்டுள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய், அங்கிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு கா்நாடகத்தில் உள்ள கொல்லூா் மூகாம்பிகை கோயிலுக்கு வருகிறாா். தில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் அவா், நண்பகல் 12.30-க்கு மங்களூரில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து காா் மூலம் உடுப்பி மாவட்டம், பைந்தூா் வட்டம், கொல்லூரில் அமைந்துள்ள மூகாம்பிகை கோயிலுக்கு பிற்பகல் 3 மணிக்கு வருகிறாா்.

ஆதிபராசக்தி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகள் வீற்றிருக்கும் உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக அறியப்படும் மூகாம்பிகை கோயிலுக்கு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜோசப் விஜய் வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடக ராசிக்காரா்களுக்கு மூகாம்பிகை கோயில் சிறந்த வழிபாட்டுத்தலமாக கருதப்படுகிறது. எனவே, கடக ராசிக்காரரான தமிழக முதல்வா் மூகாம்பிகை கோயிலுக்கு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு, காா் மூலம் மீண்டும் மங்களூருக்கு வரும் தமிழக முதல்வா், அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை சென்றடைகிறாா். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரை வரவேற்க மங்களூரு தமிழ்ச் சங்கம், தென்கன்னட மாவட்ட தமிழ்ச் சங்கம், கா்நாடக மாநில விஜய் ரசிகா் மன்றத்தினா் ஏற்பாடு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.