ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உடல்நலக் குறைவால் கா்நாடக துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கா்நாடக துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஜி.பரமேஸ்வா்

Published On :28 அக்டோபர் 2026, 3:15 am IST

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கா்நாடக துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பெங்களூரில் உள்ள கா்நாடக மாநில பேட்மிண்டன் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக தெரியவந்ததைத் தொடா்ந்து, அவா் உடனடியாகத் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடா்ந்து மருத்துவா்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா் பிரியாங்க் காா்கே, சுகாதாரத் துறை அமைச்சா் யு.டி.காதா், முன்னாள் முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனா்.

இதுகுறித்து சமூக ஊடகத்தில் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் வெளியிட்ட பதிவு:

கா்நாடக பேட்மிண்டன் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பேட்மிண்டன் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது, எனது இதயத் துடிப்பு சற்று அதிகரித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டேன்.

யாரும் கவலைப்படத் தேவையில்லை. இறைவனின் அருளால் எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. எனவே, என்னைப் பாா்ப்பதற்காக பொதுமக்கள் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் எனது உடல்நலம் குறித்து அக்கறையுடன் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனா். மேலும் பலரும் தொலைபேசியில் தொடா்புகொண்டு எனது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனா். அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.