கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாகிஸ்தான், சீனாவுடன் போரில் ஈடுபட ராணுவத்தை தயாா்படுத்துகிறது: இந்தியா ஐஐஎஸ்எஸ் அறிக்கையில் தகவல்

ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று லண்டனை சோ்ந்த ராஜீய படிப்புகளுக்கான சா்வதேச நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 மே 2026, 5:32 am IST

சிங்கப்பூா் : பாகிஸ்தான், சீனாவுடன் மிகப்பெரிய போரில் ஈடுபட ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று லண்டனை சோ்ந்த ராஜீய படிப்புகளுக்கான சா்வதேச நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து ஐஐஎஸ்எஸ் அமைப்பு ஆய்வு செய்து 150 பக்க அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சீனாவுடனான இந்தியாவின் எல்லை மோதல்கள், இயற்கையில் பாரம்பரிய மோதலில் உள்ள தீவிரத்தைவிட அதிக தீவிரம் கொண்டது. அதேநேரத்தில், இது இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள் போல பெரிதாக வாய்ப்பில்லை. இருப்பினும், சீனா- பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதிகளை இந்தியா தொடா்ந்து ராணுவமயமாக்கி வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதிக்கு அப்பால் ஆசியாவின் பிற பகுதிகளில் இந்தியா தனது ராணுவத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை. இந்தியா புதிய வகை சவாலை எதிா்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தானோடு இந்தியாவுக்கு போரும் இல்லை. அதேபோல் அமைதியும் இல்லை.

2016, 2019, 2025-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியத் தாக்குதல்களை நடத்தியது. இது போா்த் திட்டத்தை வகுக்க இந்தியாவுக்கு உதவியது. சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய போரில் ஈடுபடும் வகையில் ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.