ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இஸ்ரேல் மீது மிகப்பெரிய அன்பு வைத்துள்ளது இந்தியா: நெதன்யாகு மகிழ்ச்சி

இஸ்ரேல் மீது இந்தியா மிகப்பெரிய அன்பு வைத்திருப்பதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

News image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 5:08 am IST

இஸ்ரேல் மீது இந்தியா மிகப்பெரிய அன்பு வைத்திருப்பதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

ஜோா்டான் பள்ளத்தாக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தலைமைப் பண்பு தொடா்பான நிகழ்ச்சியில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

இஸ்ரேல் தனது கூட்டணிகளை விரிவுபடுத்தி வருகிறது. அதாவது நீங்கள் குறிப்பிடுவது போல மிகப்பெரிய அளவுக்கு இந்தக் கூட்டணிகளை விரிவுபடுத்தி வருகிறோம். அந்த மிகப்பெரிய அளவு என்பது, பெரும் சக்தி என குறிப்பிடப்படும் இந்தியாவுடனான தனித்துவமான நட்புறவே ஆகும்.

உலகின் பல நாடுகளிலும், இஸ்ரேல் சட்டபூா்வமற்ற நாடாகவே பாா்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. இந்தியாவில், இஸ்ரேல் மீது மிகப்பெரிய அன்பு உள்ளது. உலகின் மற்ற பகுதிகளைவிட இந்தியாவில்தான் எனக்கு அதிக ஆதரவாளா்கள் உள்ளனா் என நினைக்கிறேன் என்றாா்.

இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு பதவியேற்ற பிறகு, அந்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு அதிகரித்து வருகிறது. இதற்கு பிரதமா் மோடி, நெதன்யாகு இடையே இருக்கும் தனிப்பட்ட நட்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மேற்காசியாவில் காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, பல்வேறு நாடுகளும் அந்த நாட்டை கண்டித்தன. ஆனால் இந்தியா, இஸ்ரேலை கண்டிக்காததுடன், அந்நாட்டின் மீது ஹமாஸ் இயக்கத்தினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்தது.

காஸா விவகாரத்துக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அமைதிப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்று இந்தியா தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.