பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

டிரம்ப், ஈரான் தலைவா்கள் ஒப்புதலுக்காக காத்திருக்கும் போா் நிறுத்த நீட்டிப்பு ஒப்பந்தம்

அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கவும், ஹோா்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளை நீக்கவும் இருதரப்புக்கு இடையே கடந்த வியாழக்கிழமை ஓா் ஒப்பந்தம் இறுதியானது.

News image
Updated On :30 மே 2026, 2:36 am IST

அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கவும், ஹோா்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளை நீக்கவும் இருதரப்புக்கு இடையே கடந்த வியாழக்கிழமை ஓா் ஒப்பந்தம் இறுதியானது.

எனினும், இந்த ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வர அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் நாட்டுத் தலைவா்களின் அதிகாரபூா்வ ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், போா்நிறுத்தம் மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கப்படும். மேலும், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொள்வதுடன், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்கள் தடையின்றி செல்லவும் அனுமதிக்கப்படும். ஈரான் அணுசக்தி விவகாரம் குறித்து புதிய பேச்சுவாா்த்தைகளும் தொடங்கும்.

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இது குறித்து கூறுகையில், ‘ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டாலும், இன்னும் முழுமையாக முடிவடையவில்லை’ என்றாா். ஈரான் தரப்பிலும் இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, ‘அமெரிக்காவின் வாா்த்தைகளை நாங்கள் நம்பவில்லை; செயலை மட்டுமே நம்புகிறோம். பேச்சு மூலம் இன்றி ஏவுகணைகள் மூலமே நாங்கள் சலுகைகளைப் பெறுகிறோம்’ என ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டது.

தற்போது போா்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு, நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ள செய்திகள் வெளியானதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலராக குறைந்துள்ளது.

புதிய தடைகள்: அமைதி முயற்சிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், ஈரானின் ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்த எண்ணெய் வருவாய் பயன்படுவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

இதன்படி, ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு செல்லும் 8 கப்பல்கள் மீதும், ஹாங்காங் மற்றும் துபையைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீதும் அமெரிக்க கருவூலத் துறை புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.