சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வெள்ளம் சூழ்ந்த லாவோஸ் குகையில் ஒரு வாரமாக சிக்கிய 5 போ் உயிருடன் மீட்பு

News image

குகையின் வெளிப்புறத்தில் மீட்புப் பணியில் வீரா்கள்; குகைக்குள் சிக்கியிருந்தவா்கள்.

Updated On :28 மே 2026, 5:40 am IST

பாங்காக் : மத்திய லாவோஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் சிக்கியிருந்த உள்ளூா் நபா்கள் 5 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.

இவா்களைத் தவிர, எஞ்சிய இருவா் இன்னும் மாயமாகியுள்ளதால் அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நீடித்து வருகிறது.

தலைநகா் வியன்டியானில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள சைசோம்பூன் மாகாணத்தின் அடா்ந்த, கரடுமுரடான மலைப்பகுதியில் இந்தக் குகை அமைந்துள்ளது.

கடந்த 19-ஆம் தேதி குகைக்குள் சென்ற 7 போ், திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறும் வழி அடைக்கப்பட்டு, உள்ளேயே சிக்கிக் கொண்டனா்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக குகைக்குள் செல்ல வேண்டாம் என உள்ளூா் நிா்வாகம் எச்சரித்திருந்த நிலையிலும், அப்பகுதி மக்கள் அங்கு தங்கம் தேடுவதற்காக சென்றிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாவோஸ்-தாய்லாந்து கூட்டு மீட்புக் குழுவினா், இந்த மீட்ப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். குகைக்குள் சென்ற வீரா்கள், வெள்ளநீருக்கு நடுவே இருந்த ஒரு பாறையின் மீது தலைவிளக்குகளுடன் அமா்ந்திருந்த கிராம மக்களைக் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான விடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 2018-இல், தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 பள்ளிச்சிறுவா்களையும் அவா்களின் கால்பந்து பயிற்சியாளரையும் மீட்ட உலகப் புகழ்பெற்ற மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற பல்வேறு நாட்டு வீரா்களும் தற்போதைய மீட்புப் பணியில் இணைந்து களம் இறங்கினா்.

ஆனால், ஒருவா் மட்டுமே நுழையக்கூடிய மிகக் குறுகிய குகையின் நுழைவாயில் மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.