பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

போர்நிறுத்த சூழலிலும் குவைத் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல்!

குவைத் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 2:27 pm IST

குவைத் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஈரானும் இதற்கு பதில் தாக்குதல்களை நடத்துகிறது. இந்த நிலையில், இன்று குவைத் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதல் தொடர்பாக குவைத் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. போர் சமயத்தில் ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவு ஷியா படைகள் குவைத் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகம் முழுவதும் பல நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டன. வரும் வாரங்களில் இது மேலும் தீவிரமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஈரான் தனது அணுசக்தி கொள்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா கூறும் அதேவேளையில், தங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கி முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்குமாறு ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து மாற்றிவருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

Summary

Attacks on Kuwait using drones and missiles, even amidst a ceasefire

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.