எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அவசரப்பட வேண்டாம்: ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக் குழுவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்!

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் - பேச்சுவார்த்தைக் குழுவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

News image

ஹோர்முஸ் நீரிணை | டொனால்ட் டிரம்ப் - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 11:13 pm IST

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல் சிலவற்றை வழங்கியுள்ளார்.

மேற்காசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர, ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்வது தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா இன்று வெளியிடக்கூடும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பான ஒப்பந்தம் பெரும்பாலும் பேசி முடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரத் தடைகளின் கீழ் முடக்கப்பட்டுள்ள ஈரானின் வெளிநாட்டு நிதியில் ஒரு பகுதியை விடுவிக்கவும், ஈரான் துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களுக்கான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க குழுவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல் சிலவற்றை வழங்கியுள்ளார். அவர்களிடம், அமெரிக்கா தரப்பிடம் காலமிருப்பதாகவும், ஆகவே அவசரப்பட வேண்டாம் என்றும் தெரிவித்திருப்பதாக டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Summary

Trump on Iran peace talks : I have informed my representatives not to rush into a deal in that time is on our side.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.