பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் பலியானது குறித்து...

News image

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் பலியாகியுள்ளனர்... - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:41 pm IST

வங்கதேச நாட்டில் தட்டம்மை பாதிப்புகளால் மேலும் 12 குழந்தைகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில், கடந்த சில வாரங்களாகத் தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தட்டம்மை பாதிப்புகளால் மேலும் 12 குழந்தைகள் பலியானதாக, கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதன்மூலம், வங்கதேசத்தில் தட்டம்மைப் பரவலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது பலியான குழந்தைகளில் 4 பேர் தட்டம்மை பாதிப்புகளாலும், 8 பேர் தட்டம்மை சார்ந்த அறிகுறிகளாலும் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 111 பேருக்குத் தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,192 பேர் தட்டம்மைக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களில் 1,016 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தில் சுகாதாரம் பாதிக்கப்பட்டதற்கும், தட்டம்மை பரவலுக்கும், இடைக்கால ஆலோசகராகப் பதவி வகித்த முஹமது யூனுஸ் மற்றும் அவரின் சுகாதார ஆலோசகர் நூர்ஜஹான் பேகம் ஆகியோர்தான் காரணம் எனக் குற்றம்சாட்டி ஏராளமான ஆர்வலர்கள் கடந்த மே 13 அன்று போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

12 more children have died due to measles in Bangladesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.