பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா ஆதரவு: பிரதமர் மோடி

மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தது குறித்து...

News image

பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் - படம் - பிடிஐ

Updated On :15 மே 2026, 3:08 pm IST

மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா தன்னால் இயன்றதைச் செய்து, ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயனத்தின் முதல்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானைச் சந்தித்தார். அப்போது தொடக்க உரையில் பிரதமர் மோடி பேசியதாவது:

"ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களை நாங்கள் கண்டித்தோம். இந்தப் போரில் ஐக்கிய அரபு அமீரகம் தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், தற்போதைய சூழ்நிலையை அமீரகம் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.

மேலும், மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநிறுத்த இந்தியா தன்னால் இயன்ற அனைத்து ஆதரவுகளையும் வழங்க தயாராக உள்ளது” எனக் கூறினார்.

பிரதமர் மோடி தனது சமூக ஊடக பக்கத்தில், “எரிசக்தி, முதலீடு, மற்றும் பல முக்கியத் துறைகளில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் கலந்துரையாடல்களை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.