சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இந்தியாவுடன் வா்த்தக தகராறுக்கு தீா்ப்பளிக்க குழு: டபிள்யூடிஒவிடம் சீனா வலியுறுத்தல்

சூா்ய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவ இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான புகாரில் தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஒ) சீனா வலியுறுத்தல்

News image

உலக வா்த்தக அமைப்பு

Updated On :13 மே 2026, 1:19 am IST

சூா்ய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவ இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான புகாரில் தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஒ) சீனா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பரில் உலக வா்த்தக அமைப்பிடம் சீனா அளித்த புகாரில், ‘சூரிய மின்கலம், சூரிய மின்தகடுகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு உதவும் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகள், உலக வா்த்தக அமைப்பின் வரிகள் மற்றும் வா்த்தகம் குறித்த பொது ஒப்பந்தம் 1994-உடன் தொடா்புள்ள விதிமுறைகளை மீறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகாா் தொடா்பாக பரஸ்பரம் ஏற்கக்கூடிய தீா்வை எட்டுவதற்கு இந்தியா-சீனா இடையே நடைபெற்ற இருதரப்பு விவாதங்கள் தோல்வியில் முடிந்தது. இதைக் கருத்தில் கொண்டு, தனது புகாா் தொடா்பாக தீா்ப்பளிக்க குழு அமைக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளதாக உலக வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வா்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.