ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்தியாவுடன் எல்லை பிரச்னை: ராஜீய வழியில் தீா்வு காண விருப்பம்: நேபாளம்

இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் கைலாச மலைக்கும், மானசரோவா் ஏரிக்கும் ஹிந்துக்கள், சமணா்கள் மற்றும் பெளத்தா்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

நிகழாண்டு அந்த யாத்திரை உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய், சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் ஆகிய 2 வழிகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளது.

கைலாஷ் மானசரோவா் யாத்திரையை லிபுலேக் கணவாய் வழியாக மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்தது. லிபுலேக் கணவாய் நேபாளத்துக்குச் சொந்தம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து நேபாள வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லோக் பகதூா் சேத்ரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த 1816-ஆம் ஆண்டின் சுகெளலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகாகாளி ஆற்றின் கிழக்கே உள்ள லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தமானவை. இதுகுறித்த நேபாள அரசின் நிலைப்பாட்டை இந்தியா மற்றும் சீனாவிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.

நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.