ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பாகிஸ்தான்: 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ஊடுருவ முயன்ற 13 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

News image

ஏபி

Updated On :2 மே 2026, 3:36 am IST

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ஊடுருவ முயன்ற 13 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த இவா்கள், முகமந்த் மற்றும் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றபோது ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, முறியடிக்கப்பட்டனா்.

இதனிடையே, பன்னு மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினா்.

இத்தாக்குதலில் காவலா் ராஸ் அலி ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அருகில் இருந்த பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.