நேபாள நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை (மார்ச் 27) பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் (ஆா்எஸ்பி) 125 உறுப்பினர்கள் நேரடியாக வெற்றி பெற்றதுடன், 57 உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 182 உறுப்பினர்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ஆர்எஸ்பி கட்சியின் தலைவரான 35 வயதாகும் முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை மதியம் 12.34 மணிக்கு பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இத்துடன், நேபாளத்தின் முதல் இளம் பிரதமரான பாலேந்திர ஷாவுக்கு அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பௌடெல் பதவிப் பிரமானம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில், ஹிந்து மற்றும் புத்த மதங்களின் சடங்குகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Former rapper Balendra Shah was sworn in as the new Prime Minister of Nepal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் நெருங்கிப் பணியாற்ற நேபாள புதிய பிரதமா் விருப்பம்

நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு: இமாலய தேசத்தில் இளைஞரின் ஆட்சி

நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


