ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலையும் உயர்ந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வரையில் ரூ. 8-க்கு விற்கப்பட்ட 200 மி.லி. குடிநீர் பாட்டில் இன்று ரூ. 10-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ. 12-க்கும், ரூ.12-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில் ரூ. 25-க்கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட 2 லிட்டர் பாட்டில் ரூ. 35-க்கும், ரூ. 50-க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் பாட்டில் ரூ. 70 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.
மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கேன்களில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் ரூ. 45-ல் இருந்து ரூ. 55-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுவாக, கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோ ரசாயன பொருள்கள் மூலமாகவே பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஈரான் போர் காரணமாக, பாலி எத்திலீன், பிவிசி, பாலி புரோப்பிலீன், பாலிஸ்டிரீன் போன்றவற்றின் விலை சுமார் 40 சதவிகிதம் உயர்ந்ததையடுத்து, பிளாஸ்டிக் பொருளிகள் விலையும் அதிகரித்துள்ளது.
Summary
Plastic packaging costs surge due to Iran war
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போர் நிறுத்தம்! ஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!

போரை நிறுத்த 30 நாள்களுக்குள் தீர்வு: அமெரிக்காவை முடிவெடுக்கச் சொல்லும் ஈரான்!

போர் நிறுத்தம்! அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


