அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டுமென ஃபிஃபா நிர்வாகத்திடம் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருவதால் ஈரானின் கால்பந்து வீரர்கள் அமெரிக்கா செல்வது மிகுந்த ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
இத்துடன், அமெரிக்கா வரும் ஈரானிய கால்பந்து வீரர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனால், அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டுமென ஃபிஃபா நிர்வாகத்திடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்புப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மெக்சிகோவில் உள்ள ஈரானிய தூதரகம் திங்கள்கிழமை (மார்ச் 16) அன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran is holding talks with FIFA to have the upcoming World Cup football matches, scheduled to take place in the United States to Mexico.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த இஸ்மாயில் சைபாரி..! மொராக்கோ த்ரில் வெற்றி!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கோலாகல தொடக்கம்...

உலகக் கோப்பையின் அதிபதி: கிரிக்கெட்டை விட 87 மடங்கு அதிக பரிசுத் தொகையுடன் களமிறங்கும் ஃபிஃபா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


