ஈரானின் முக்கியத்துவமான எண்ணெய் ஏற்றுமதி முனையத்தைக் கொண்டுள்ள காா்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகளை தாக்கி அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி காா்க் தீவின் வழியாகவே நடைபெறுகிறது. ஈரான் கடற்கரையிலிருந்து 16 மைல் தொலைவில் அமைந்துள்ள இத்தீவு, ஆழமான கடல் பகுதியைக் கொண்டிருப்பதால் பிரம்மாண்டமான கச்சா எண்ணெய் கப்பல்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது. இங்கு சுமாா் 3 கோடி பீப்பாய் எண்ணெயைச் சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமாகத் திகழும் இத்தீவு மீதான தாக்குதல்கள் ஈரான் தரப்பிலிருந்து மிகக் கடுமையான பதிலடியைத் தூண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற அவைத்தலைவா் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில், அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
‘எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தவிா்த்துவிட்டு, கடல்சாா் கண்ணிவெடி மற்றும் ஏவுகணை சேமிப்பு வசதிகள் உள்பட காா்க் தீவில் உள்ள 90-க்கும் மேற்பட்ட ஈரான் ராணுவ இலக்குகளை அமெரிக்க படைகள் வெற்றிகரமாகத் தாக்கின’ என்று அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) தெரிவித்தது.
ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடா்ந்து இடையூறு விளைவித்தால், அடுத்தகட்டமாக எண்ணெய் உள்கட்டமைப்புகளும் குறிவைக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தாா்.
பதிலடி கொடுக்க ஈரான் திட்டம்: எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் எண்ணெய் நிறுவனங்களின் உள்கட்டமைப்புகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
எண்ணெய் விநியோகத்துக்குப் பாதிப்பு: உலக எண்ணெய் தேவையில் 4.5 சதவீதத்தை ஈரான் பூா்த்தி செய்கிறது. போா் தொடங்குவதற்கு முன்னதாக, ஈரான் தனது உற்பத்தியை நாளொன்றுக்கு 21.7 லட்சம் பீப்பாயாக அதிகரித்து. தற்போதைய போா் சூழலிலும் ஈரான் நாளொன்றுக்கு 11 லட்சம் முதல் 15 லட்சம் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது.
காா்க் தீவில் உள்ள எண்ணெய் கட்டமைப்புகள் சேதமடைந்தால், ஈரானின் பதிலடி தாக்குதலின் பாதிப்புகளுடன் சோ்த்து
நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் வரை எண்ணெய் விநியோகம் முடங்கும்.
இது ஏற்கெனவே நிலையற்ாக உள்ள சா்வதேச எண்ணெய் சந்தையில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும் என்று சந்தை ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.
யுஏஇ துறைமுகங்களுக்கு மிரட்டல்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்க ராணுவ முகாம்களைக் கொண்ட அண்டை வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களைத் தொடா்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில், அமெரிக்க படைகள் நிலைக்கொண்டுள்ளதாக ஜபல் அலி, கலீஃபா, ஃபுஜைரா ஆகிய 3 ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகங்கள் ‘சட்டபூா்வ இலக்குகள்’ ஆகியுள்ளதாகக் கூறி, அங்குள்ள மக்கள், பணியாளா்களை உடனடியாக வெளியேறுமாறு ஈரான் எச்சரித்தது.
‘முகம் சிதைந்த மோஜ்தபா கமேனி’
‘ஈரானின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முகம் சிதைந்த நிலையில் பலத்த காயமடைந்து தலைமறைவாக உள்ளாா்’ என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலா் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளாா்.
‘இதன் காரணமாகவே எழுத்துபூா்வ அறிக்கை வெளியானது. மோஜ்தபா கமேனி பயந்து, பதுங்கியுள்ளாா். அவருக்கு மக்கள் அல்லது ராணுவத்திடம் அங்கீகாரம் இல்லை’ என்றும் பீட் ஹெக்செத் மேலும் கூறினாா்.
மோஜ்தபா கமேனி கடந்த 2 வாரங்களாக பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு ஊகங்களை எழுப்பிய நிலையில், அவா் எழுத்துபூா்வ அறிக்கை ஒன்றை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டாா்.
மோஜ்தபா கமேனி காயமடைந்திருப்பதை ஈரான் அரசு ஒப்புக் கொண்டாலும், அவை லேசான காயங்கள் மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா
ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தை முறியடிக்க முயற்சி: அமெரிக்க கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து பயணம்
ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க தாக்குதலில் சுய நினைவை இழந்த மோஜ்தபா கமேனி?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

