ஈரானின் புதிய உச்ச தலைவா் மோஜ்தபா கமேனி பற்றி தகவல் அளித்தால் ஒரு கோடி டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே (பிப்ரவரி 28) ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டாா். இதையடுத்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக தோ்வு செய்யப்பட்டாா். ஈரான் மக்களுக்கு அவரது அறிக்கை அரசுத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை வாசிக்கப்பட்டது. அதில், இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடா்ந்து தாக்குதல் நடத்தும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இதனிடையே, ஜெருசலேமில் செய்தியாளா்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு, மோஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.
இந்த நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவா் மோஜ்தபா கமேனி உள்பட 10 தலைவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு, இவர்கள் குறித்து தகவல் அளித்தால் ஒரு கோடி டாலர் (இந்திய மதிப்புபடி ரூ. 92+ கோடி) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோஜ்தபா கமேனி அலுவலகத்தின் துணைத் தலைவர், பாதுகாப்புத் துறை செயலாளர், ராணுவ ஆலோசகர், உள்துறை அமைச்சர், புலனாய்வுத் துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

X / Rewards for Justice
மேலும், இவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிட்டு நடத்தும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை வழிநடத்தும் நபர்கள் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
US offers Rs 92 crore reward for information on Iran's new leader
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அணுசக்தி, ஏவுகணைத் திட்டங்கள் நாட்டின் சொத்து - ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

பிடிவாதம் தளர வேண்டும்!

அமெரிக்க தாக்குதலில் சுய நினைவை இழந்த மோஜ்தபா கமேனி?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

