விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு!

ஈரானுக்கு எதிராக ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது பற்றி...

News image

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் - AP

Updated On :12 மார்ச் 2026, 12:22 pm IST

மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்து இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் 135 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேறிய நிலையில், சீனாவும், ரஷியாவும் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் மீது ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. விமான நிலையங்கள் உள்பட பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் சில ஏவுகணைகள் விழுந்ததால் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தில், “மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதலையும், ஹோர்முஸ் நீரிணையை மூடி கடல்சார் வர்த்தகத்தில் தலையிடுவதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா உள்பட 135 நாடுகள் ஆதரவளித்ததை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பை புறக்கணித்த சீனா, “இந்த மோதலின் உண்மையான காரணத்தை தீர்மானம் பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்தது. ரஷியாவும் ஒருதலைப்பட்சமான தீர்மானம் என்று விமர்சித்தது.

Summary

UN resolution against Iran! India supports it!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.