ஈரானுக்கு எதிரான போரில் வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளைத் திரும்ப பெற அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பிரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த, ஜனநாயக்கட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக, வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளைத் திரும்ப பெற வேண்டும் என செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களான சூசன் காலின்ஸ் (மெய்ன்), லிசா முர்கோவ்ஸ்கி (அலாஸ்கா), ராண்ட் பால் (கென்டக்கி) மற்றும் பில் காசிடி (லூசியானா) ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஜான் பெட்டர்மேன் (பென்சில்வேனியா) தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். பிரதிநிதிகள் சபையில் 50-48 வாக்குகள் அடிப்படையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் ஒரு கூட்டுத் தீர்மானம் என்பதால், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட போதிலும் இதற்கு அதிபர் டிரம்ப்பின் கையொப்பம் தேவையில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்தத் தீர்மானம் ஈரானுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Summary
The Senate on Tuesday adopted a Iran war powers resolution passed earlier this month in the House by a 50-48 vote in a symbolic, yet rare, rebuke of President Donald Trump.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடுவேன்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: அமெரிக்க படைகளின் வான் வழி தாக்குதல் குறித்து டிரம்ப்
அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
