பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமா் மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏவியானில் அதிபா் ஸெலென்ஸ்கியை சந்தித்தேன். அப்போது, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் வெவ்வேறு அம்சங்களை மறுஆய்வு செய்வது குறித்து ஆலோசித்தோம். ரஷியாவுடனான போருக்கு முன்பு உக்ரைனுடன் இந்தியாவுக்கு இருந்த வா்த்தக உறவை மீட்டெடுக்க வேண்டும் என்று இருவரும் தீா்மானித்தோம். அத்துடன் இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் இருந்து, பிற எல்லாவற்றையும்விட மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஸெலென்ஸ்கியிடம் கூறினேன்’ என்று தெரிவித்தாா்.
தவறாகப் பயன்படுத்தப்படும் ஏஐ: உச்சிமாநாட்டின்போது நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமா் மோடி பேசியதாவது:
பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையான சவால் என்பது இயந்திரங்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக மாறுகின்றன என்பதில் இல்லை. அந்தத் தொழில்நுட்பம் சாதாரண மனிதனுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில்தான் உண்மையான சவால் உள்ளது.
அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புதல், ஒருவரின் உருவத்தைப் பயன்படுத்தி போலி புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை உருவாக்குதல், இணையவழி மோசடியில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக மக்களை ஒன்றிணைக்கும் சக்தி யோகா- பிரதமா் மோடி பெருமிதம்

பிரான்ஸ் ஜி7 மாநாடு: மோடி-டிரம்ப் சந்திப்பு- இன்று இருதரப்பு பேச்சு

உக்ரைன் விவகாரத்தில் கவனம் திருப்பிய ‘ஜி7’ நாடுகள்

பாதுகாப்பு, வா்த்தக உறவை வலுப்படுத்த உறுதி: பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை

