லண்டனில் 26 வயது இந்திய வம்சாவளி இளைஞர் கத்திக்குத்து தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு லண்டனின் சவுத்தால் பகுதியில் உள்ள நார்த் சாலை மற்றும் டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்பிற்கு அருகே கடைக்கு வெளியே புதன்கிழமை நள்ளிரவு நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குர்பேஜ் சிங்(26) பலியானார். அவருடன் இருந்த 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் காயமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த குர்பேஜ் சிங்கைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினர் முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தது. விசாரணையைத் தொடர்ந்து, அவர்களில் ஆறு பேர்விடுவிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் பின்னர் ஒரு தேதியில் ஆஜராகும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, பலியான குர்பேஜ் சிங்கின் குடும்பத்தினருக்கு சிறப்பு காவல் அதிகாரிகள் தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
Summary
A 26-year-old Indian-origin man was murdered in a knife attack in Southall, west London, the Metropolitan Police said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிஃபா உலகக்கோப்பை அறிமுகப் போட்டியில் ரசிகர்களைக் கவர்ந்த இந்திய வம்சாவளி வீரர்!
தாயும் மகனும் மேயர்கள்...

குவைத் விமான நிலையம் மீதான ஈரானின் தாக்குதலில் பலியானவர் இந்தியர்!

யூனிட்டி கோப்பை: இந்திய கால்பந்து அணி லண்டன் பயணம்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


