ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 9) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரானிய படைகள் சுட்டுவீழ்த்தின.
இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள ஈரானிய தளங்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஈரானிய படைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இதுபற்றி, ஈரானிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோர்டானின் அல் அஸ்ரக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் எஃப்-35 போர் விமானங்களின் மீதும், அமெரிக்க கட்டுப்பாட்டு மையத்தின் மீதும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தங்கள் நாடுகளில் உள்ள தளங்களைப் பயன்படுத்தாமல் தடுத்த நிறுத்த வேண்டியது வளைகுடா நாடுகளின் பொறுப்பு எனக் கூறியுள்ள ஈரானிய ராணுவம் இதுவரை அமெரிக்காவின் 4 முக்கிய தளங்களை அழித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால், ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாகவும்; இந்தத் தாக்குதலால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ராணுவங்கள் தெரிவித்துள்ளன.
Summary
Iranian forces have launched attacks targeting US bases located in countries including Jordan and Bahrain.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கும் அமெரிக்கா!

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றம்!

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


