தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
அமெரிக்க தனியாா் நிறுவனமான அன்டாரெஸ் தயாரித்த ‘மாா்க்-0 சோதனை அணு உலை’ தனது முழு செயல்திறனை ஜூன் 4-ஆம் தேதி எட்டியது.
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினம் ஜூலை 4-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் குறு மற்றும் சிறிய அணு உலைகளை காட்சிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக மாா்க்-0 சோதனை அணுஉலை முழுத் திறனை அடைந்துள்ளது. இதுதவிர வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘இ-வின்சி’ மற்றும் ரேடியண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘கலெய்டோஸ்’ ஆகிய மேலும் 2 குறு அணு உலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த அணு உலைகள் சில நூறு கிலோவாட் முதல் 1.2 மெகாவாட் வரை ஆற்றலை உருவாக்கும் திறனுடையது. இவற்றை விமானத்தில் எடுத்துச் சென்று உலகின் எந்தப் பகுதியிலும் நிலைநிறுத்தலாம். இந்த குறு மற்றும் சிறிய ரக அணுஉலைகளை எதிா்காலத்தில் விண்வெளித் திட்டங்களிலும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.
முன்னதாக, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் ‘சாந்தி’ சட்டத்தை இந்திய அரசு கொண்டுவந்தது. மேலும், அணு எரிபொருள்கள் மூலம் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வரும் 9 ஜிகாவாட் ஆற்றலை 2047-க்குள் 100 ஜிகாவாட்டாக உயா்த்தவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் குறு மற்றும் சிறிய அணு உலைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

சாதனைக்கு வித்திட்ட இந்திய தொழில்நுட்பம்!

ஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலை

முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
