எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நிஜ உலகில் வாழுங்கள்: கமேனி - டிரம்ப் சந்திப்பு தொடர்பாக ஈரான் கருத்து!

டிரம்ப் - கமேனி சந்திப்பு தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மறுப்புத் தெரிவித்துப் பேசியுள்ளார்.

News image

மோஜ்தபா கமேனி | டிரம்ப் - ANI

Updated On :7 ஜூன் 2026, 8:09 pm IST

டிரம்ப் - கமேனி சந்திப்பு தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மறுப்புத் தெரிவித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி இடையே சந்திப்பு நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருவருக்குமான சந்திப்பு நடைபெறக்கூடும் என டிரம்ப் முன்னர் கூறியிருந்த நிலையில் அதனை மறுத்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். அதில், “டிரம்ப் கமேனியுடன் சந்திப்பு நடத்தத் தயாராக இருப்பதாகவும் அல்லது சந்திப்பு நடத்த விரும்புவதாகவும் ஒரு அறிக்கையைப் பார்த்தேன். நாம் யதார்த்தமாகச் சிந்தித்து, நிஜ உலகில் வாழ வேண்டும் எnறு நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி - கோப்புப் படம்

ஈரான் தனது அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறிய டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் கமேனியைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என்றும் எதிர்காலத்தில் சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் கமெனியுடன் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக சூசகமாகக் கூறியதைத் தொடர்ந்து அப்பாஸ அரகாச்சி இவ்வாறு பேசினார்.

மேலும், ஈரானின் ராணுவத் திறனை அமெரிக்கா வெகுவாகக் குறைத்திருப்பதாகவும் டிரம்ப் பேசியிருந்தார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் அமெரிக்காவில் பெருமளவில் உள்நாட்டு எதிர்ப்பைச் சந்தித்துள்ளன. வருகிற நவம்பரில் நடைபெறவுள்ள பிரதிநிதிகள் சபை தேர்தலில் இது டிரம்ப் கட்சிக்கான ஆதரவை எந்த விதத்திலும் அதிகரிக்கவில்லை எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

Summary

Iran's Abbas Araghchi rejects possibility of Trump-Khamenei talks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.