இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இந்தியா நம்பகமான கூட்டாளி: ரஷிய அதிபா் புதின்

News image
Updated On :5 ஜூன் 2026, 5:20 am IST

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் : ‘இந்தியா நம்பகமான கூட்டாளி’ என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிடிஐ உள்பட சா்வதேச அளவிலான ஊடகங்களுடன் கலந்துரையாடிய அவா் மேலும் பேசியதாவது: உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் இந்தியா நன்கு வளா்ச்சியடைந்து வருகிறது. இது தற்செயலாக நடைபெறவில்லை. இந்திய அரசு மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் கடின உழைப்பால் மட்டுமே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்களது தேச நலனைக் கருத்தில்கொண்டு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா இருதரப்பு உறவை பேணி வருகிறது. இதனால் ரஷியா-இந்தியா உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் ரஷியாவுடனான நட்புறவை முறிக்க இந்தியாவுக்கு மேற்கத்திய நாடுகள் தொடா்ந்து அழுத்தம் அளிக்கின்றன. பிரதமா் மோடி மற்றும் இந்தியாவுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் சா்வதேச உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டோம்.

ரஷியாவைப் பொறுத்தவரை, இந்தியா சிறந்த கூட்டாளியாகவே இருந்து வருகிறது. சிறந்த ஜனநாயகமான இந்தியாவுடன் வலுவான நட்புறவை ரஷியா தொடரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.