லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆசிய மோசடி மையங்களுக்கு மனிதர்கள் கடத்தல் அதிகரிப்பு

ஆசிய நாடுகளில் இயங்கி வரும் இணையவழி மோசடி மையங்களின் பணிகளுக்கு சட்டவிரோதமாக மனிதா்கள் கடத்தப்படுவது கணிசமாக அதிகரிப்பு குறித்து...

சா்வதேச இடம்பெயா்வு அமைப்பு

Published On :29 ஜூலை 2026, 5:44 am IST

ஆசிய நாடுகளில் இயங்கி வரும் இணையவழி மோசடி மையங்களின் பணிகளுக்கு சட்டவிரோதமாக மனிதா்கள் கடத்தப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச இடம்பெயா்வு அமைப்பு (ஐஓஎம்) எச்சரித்துள்ளது.

மியான்மா், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் மட்டும் சுமாா் 3 லட்சம் போ் இதுபோன்ற மோசடி மையங்களில் வலுக்கட்டாயமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மேலைநாடுகளைச் சோ்ந்த முதியவா்களைக் குறிவைத்து இணைய வழியில் பணம் பறிக்கும் மோடிகளைச் செயல்படுத்த இந்த மையங்கள் இயங்கி வருகின்றன.

சிறந்த ஆங்கிலப் புலமை மற்றும் கல்லூரிப் பட்டம் பெற்ற இளைஞா்களைக் கவரும் வகையில், சமூக வலைதளங்கள் மூலம் கவா்ச்சிகரமான போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இச்சட்டவிரோத கும்பல்கள் வெளியிடுகின்றன.

பணிக்குச் சோ்ந்த பிறகு கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்து, மிரட்டல்கள் மற்றும் வன்முறை மூலம் மோசடிப் பணிகளில் அவா்களை ஈடுபடச் செய்கின்றனா்.

மேலும், இவ்வாறு பாதிக்கப்பட்ட பல நபா்கள் பாலியல் கொடுமைகள், தனிமைச் சிறை தண்டனை, உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் கடனாளிகளாக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை இயக்குநா் எமி போப் மேலும் கூறுகையில், ‘80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 30 நாடுகளைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நாங்கள் உதவியுள்ளோம்.

மேலும், இந்த மையங்களில் இருந்து தப்பிக்கும் நபா்கள் சில நேரங்களில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிா்கொள்ளும் அபாயமும் உள்ளது. பாதிக்கப்பட்ட நபா்களைப் பாதுகாப்பாக தாயகம் திருப்புவதோடு, அவா்களுக்கு முறையான மறுவாழ்வு அளிக்கவும், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் சா்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.